செய்திகள்

கிராமங்களில் இன்டர்நெட் வசதி; முதல்வர் ஸ்டாலின் தொடக்கம்!

கல்கி

தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ரூ.1,627 கோடி மதிப்பீட்டில்  அதிவேக இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதவர் மு..ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சியில் பைபர் ஆப்டிக் கம்பி வடம் பதிக்கும் பணியையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது; 

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் பாரத் நெட் என்கிற  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி செயல்படுத்தப்படும் என தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழகத்தில் 12,525 கிராமங்களில் ரூ.1,627 கோடி மதிப்பீட்டில் இணையவசதி ஏற்படுத்தி தரும் பாரத் நெட் திட்டத்தை முதல்வர்  மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதன்முதலாக கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பைபர் ஆப்டிக் கேபிள் மூலமாக தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு ஓராண்டுக்குள் அதிவேக இணையதள வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

நட்பின் கதவைத் திறக்கும் மந்திரச் சொல் பழக்கத்தில் வந்தது எப்படி? எப்போது?

சிறுகதை: கணவன்மார்களும்…காத்திருப்போர் சங்கமும்!

ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் இது மட்டும் போதுமே....

SCROLL FOR NEXT