செய்திகள்

இன்று விண்ணில் ஏவப்படுகிறது இந்திய ராக்கெட்!

கல்கி

இன்று மாலை 6 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

இன்று ஏவப்படும் பி.எஸ்.எல்.வி.சி-53 ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட எலக்ட்ரோஆப்டிக் செயற்கைக்கோள் பொருத்தப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை பார்க்கும் வசதி கொண்டது.

இது கடல்சார் பாதுகாப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும். மேலும் இந்த செயற்கைக்கோளுடன், 155 கிலோ எடை கொண்ட என்இயுசாட் என்ற மற்றொரு செயற்கைக் கோள், கொரியா நாட்டைச் சேர்ந்த 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 என்று மொத்தம் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன். 

–இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்ட்-டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அல்சரை குணப்படுத்தும் 6 அற்புத உணவுகள்! 

வீட்டில் அகர்பத்தி ஏற்றுவதால் இவ்வளவு நன்மைகளா? 

துபாயை அடுத்து சவுதியிலும் கனமழை… ரெட் அலர்ட் எச்சரிக்கை!

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்திற்கு இளையராஜாவால் வந்த புது பிரச்சனை!

மே தினம் வந்த கதை தெரியுமா உங்களுக்கு?

SCROLL FOR NEXT