Kovai Kamakshipuri Adheenam Sivalingeswara Swamy passes away: CM M.K.Stal's condolence https://www.seithipunal.com
செய்திகள்

கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கல்கி டெஸ்க்

கோவை மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது அங்காள பரமேசுவரி சக்தி பீடம். இந்த பீடத்தின் ஆதீனமாக இருந்து வந்தார் சிவலிங்கேஸ்வர சுவாமிகள். இவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதைத் தொடர்ந்து அவரது பூத உடல் இருகூரில் உள்ள ஆதீனத்திற்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கேஸ்வர சுவாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியைத் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், “கோவை காமாட்சிபுரி ஆதீனத் தலைவர் தவத்திரு சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

மேற்கு மண்டலத்தில் ஆன்மிக வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவியான சிவலிங்கேஸ்வர சுவாமிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவர். தமிழைப் பரப்புவதைத் தமது வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்த அவர், பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் குரு பூஜை செய்யும் உரிமையைப் பெற்றவர் ஆவார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழ் மொழியைப் பரப்பி வந்த அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களைத் தங்கவைத்து, அவர்கள் கல்வி கற்க உதவிகளையும் புரிந்து வந்தார்.

தொண்டிலும், துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ்ச் சமய நெறிக்கும், தமிழ்மொழி வழிபாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது சீடர்களுக்கும், மாணவர்களுக்கும், சமயப் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் செய்தி மற்றும் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT