குறிஞ்சி மலர் 
செய்திகள்

கேரளாவில் பூத்துக் குலுங்குகிறது குறிஞ்சி மலர்!

கல்கி டெஸ்க்

கேரளாவில் மூணாறு உட்பட பல மலைப் பிரதேசங்கலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர்கள் இப்போது சீசன் தொடங்கி பூத்துக் குலுங்கி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிற்து.

குறிப்பாக தமிழக -கேரள எல்லையான கள்ளிப்பாறை என்ற மலைப்பகுதியில்  நீல வண்ணப் பட்டாடை போர்த்தியது போல் 5 ஏக்கரில்  மலை முழுவதுமாக பூத்து குலுங்குகிறது நீலக் குறிஞ்சி பூக்கள்.

மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக மூணாறு - தேக்கடி நெடுஞ்சாலையில் உட்புற மலை முகடுகளில் குறிஞ்சி மலர்களின் கொண்டாட்டம் கண்களுக்கு விருந்தாக காட்சியளிக்கிறது.

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு இப்போது அதிகளவு இங்கு டூரிஸ்ட் பயணிகள் இந்த குறிஞ்சி மலர்களைப் பார்ப்பதற்காகவே வரத் தொடங்கியுள்ளனர். அவ்வளவாக சாலை வசதிகள் இல்லாதபோதும் ஜீப் வசதிகள் மூலம் பொதுமக்கள் வர துவங்கியுள்ளனர்

‘’இப்போது சான்ஸ் மிஸ் பண்ணி விட்டால், பிறகு 12 வருஷம் கழித்துதானே இந்த மலர்களைப் பார்க்க முடியும்? அதனால்தான் திருச்சியிலிருந்து அடித்து பிடித்து மூணாறு வந்திருக்கோம்’’ என்றார் செல்வியும் அவரது குடும்பத்தினரும். 

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT