Mallikarjuna 
செய்திகள்

லோக்சபா தேர்தல்: 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!

பாரதி

வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ1 லட்சம் வழங்குதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் உட்பட ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் விறுவிறுப்பாகச் செயல்படுகின்றன. அதேபோல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, வெற்றிபெறுவதற்கானத் திட்டம், வாக்குறுதிகள் என முழு ஈடுபாடுடன் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில்தான் காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதுத்தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதோடு அவை என்னென்ன வாக்குறுதிகள் என்பதையும் சேர்த்துக் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் ஒருப் பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். அதேபோல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்துத் தரப்படும் என்றும் மதிய உணவு திட்டப் பணியாளர்களின் சம்பளம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த மூன்று வாக்குறுதிகளை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள் இரு மடங்காக அதிகரித்துத் தரப்படும். மேலும் பஞ்சாயத்து வாரியாகப் பெண்களுக்குச் சட்ட உரிமைகள் மற்றும் உதவிகள் வழங்கக் குழு அமைக்கப்படும். இவ்வாறு ஐந்து வாக்குறுதிகளை மல்லிகார்ஜுன் அறிவித்திருக்கிறார்.

மேலும் மற்றொரு பதிவையும் பதிவிட்டிருக்கிறார். அதாவது மோதி போல் அல்லாது காங்கிரஸ் கர்நாடகா மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், அதில் ஒவ்வொருத் திட்டங்களையும் குறிப்பிட்டு அதில் எவ்வளவு மக்கள் பயணடைந்தார்கள் என்பதையும் சேர்த்துக் குறிப்பிடுள்ளார்.

இது அளவோடு இருந்தால் சமையலும் ருசிக்கும்; உடல் நலனும் சிறக்கும்!

மழைக்காலத்தில் மட்டும் வைரஸ் காய்ச்சல் ஏன் அதிகமாக வருகிறது தெரியுமா? 

நிர்வாகத் தலைவருக்கு அவசியம் இருக்க வேண்டிய 10 குணங்கள்!

குமாஸ்தன்: தவற விடக்கூடாத படமல்ல; பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்!

Mutual Fund vs. Stocks: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

SCROLL FOR NEXT