Tree
Tree 
செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்! 100 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது !

கல்கி டெஸ்க்

மாண்டஸ் புயலின் காரணமாக சென்னையில் 90 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போன்று செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள்

தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களிலும் பலத்த காற்று வீசியது. சில இடங்களின் மழையம் பெய்தது.

மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்து முடிந்தது. சுமார் ஐந்தரை மணி நேரமாக இந்த கரையைக் கடக்கும் நிகழ்வு நடந்தது.

Tree

புயலின் மையப் பகுதி கரையை கடக்கும்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. சென்னையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசியதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறின. பல பழமையான மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பாதிப்பு சற்று குறைவாக இருந்தது.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 வருடங்களுக்கு மேல் இருந்த மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன.

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

SCROLL FOR NEXT