Virus among Pig 
செய்திகள்

பன்றிகளிடையே தீவிரமாக பரவும் மர்ம நோய்!

பாரதி

இலங்கையில் பன்றிகளிடையே ஒரு மர்ம நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பன்றிகள் இடையே அவ்வப்போது இதுபோல வைரஸ் பரவும். ஒருசில நேரத்தில் இது வேகமாக பரவி மனிதர்களுக்குப் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், சில வைரஸ் மனிதர்களுக்கு பரவாது. அந்தவகையில் பன்றிகளிடையே ”Porcine Reproductive and Respiratory Syndrome” எனப்படும் வைரஸ் ஒன்று தீவிரமாக பரவி வருகிறது.

இதுகுறித்து வனவிலங்கு பாதுகாப்பு சுகாதார பணியாளர் பேசுகையில், “யால, சிலாபம், பலப்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் Porcine Reproductive and Respiratory Syndrome என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.” என்று பேசினார்.

மேலும் “இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. பன்றி இறைச்சியை உண்டாலும் இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் இதுவரை கண்டெடுக்கவில்லை. ஆனாலும், பன்றி பண்ணைகளில் அதிகம் பரவி பன்றிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம்.” என்று பேசியுள்ளார்.

Porcine Reproductive and Respiratory Syndrome என்றால் பன்றிகளிடையே பரவக்கூடிய ஒரு வைரஸ்.  இது காற்று மூலமும் பரவும். அதேபோல், ஊசி, தொடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பன்றிகளை ஏற்றிய வண்டியில் பன்றிகளை ஏற்றுவது போன்றவற்றால் பரவும். குறிப்பாக ஈரமாக இருக்கும் இடங்களிலும் குளிர்பிரதேசங்களிலும் அதிகம் பரவும்.

இந்த வைரஸ் இனப்பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இளம் பன்றிகளையிடையே நிமோனியாவை ஏற்படுத்தும். மேலும் இதய செயலிழப்பு, ரத்த நாள அழற்சி, மூளையழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆய்வின்படி இந்த வைரஸ் பன்றிகளிடையே பாதிப்பை ஏற்படுத்தினால், காய்ச்சல் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்பட்டு இரண்டு வாரத்திற்குள் சுமார் 20 சதவீத அளவு இறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட பன்றிகளை தனிமைப்படுத்துதல் மூலம், இந்த வைரஸ் பரவுதலை தடுக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

SCROLL FOR NEXT