செய்திகள்

ஜனவரி முதல் புதிய வருகை TNSED Attendance செயலி!

கல்கி டெஸ்க்

இனி வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலியில் ஜனவரி 1 முதல் வருகை பதிவு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் , ஆசிரியல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவுகள் ஜனவரி 1 முதல் TNSED attendence செயலி ( App ) மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு, அது தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசிடமிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு பழைய வருகை பதிவு செயலியில் இருந்து வெளியேற வேண்டும். பழைய செயலிகள் அனைத்தும் 31 டிசம்பர் 2022 முதல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TNSED Schools செயலியிலிருந்து வெளியேறி TNSED attendance செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதில் உபயோகப்படுத்திய அதே பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைவு செய்துகொள்ளலாம்.

பள்ளி வேளை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றவாறு மாறியமைக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி ஆசிரியர்கள், வேலை ஆட்கள் மற்றும் மாணவர்களில் வருகைப் பதிவுகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT