boomi pooja
boomi pooja 
செய்திகள்

சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய சுங்க கட்டிடம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைப்பு!

கல்கி டெஸ்க்

சென்னை பாரிமுனையில் உள்ள, சென்னை சுங்கத் துறை தலைமை அலுவலக வளாகத்தில், 92 கோடி ரூபாயில், புதிய சுங்க அலுவலகம் கட்டடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

சென்னையில் உள்ள சுங்க இல்லத்தில் வைகை எனும் புதிய அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். புதிய கட்டடத்திற்கான பூமி பூஜையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சுங்கக் கட்டடம் கட்டப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில், 92 கோடி ரூபாயில் அமையும் இந்த வைகை வளாகம் ஒன்பது அடுக்குகள் உடையது

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வர்த்தகத்துறையில் நாடு முன்னேற்றமடைய சுங்கத்துறையின் பங்கு மிக முக்கியமானது என்று தெரிவித்தார். சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் சுங்கக் கட்டடம் பணியாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கட்டப்படவுள்ளதாக கூறினார். பிரதமரின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை சுங்க இல்லம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

Nirmala seetharaman

தமிழகத்தில் முன்யோசனையுடன் இதுபோன்ற அலுவலக கட்டடம் கட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கூறிய அவர், புதிதாக கட்டப்படும் வைகை வளாகம் இனி கட்டப் போகும் கட்டடங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் தொழிற் துறையினருக்கான பல்வேறு வசதிகளுடன, இந்த வளாகம் அமைய உள்ளது. வரி நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்துவதில்,இந்த திட்டம் பெரும்பங்கு வகிப்பதுடன்,ஏற்றுமதி, இறக்குமதியை துரிதப்படுத்தவும் எனவும் உதவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா, மத்திய மறைமுக வரிகள் வாரிய உறுப்பினர் ராமா மேத்யூ, சென்னை சுங்கத் துறை முதன்மை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.

கோரைக்கிழங்கு பிரசாதமாக தரும் கோயில் எது தெரியுமா?

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

SCROLL FOR NEXT