இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவால் வீசப்பட்டு மண்ணில் புதைந்திருந்த வெடிகுண்டு தற்போது வெடித்துள்ளது. அதாவது, அமெரிக்காவால் வீசப்பட்ட அந்த வெடிகுண்டு, ஜப்பான் விமான நிலையத்தில் வெடித்ததால், விமான ஓடுபாதையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த விமான நிலையம் மூடப்பட்டு 87 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 6ம் தேதியன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஞாயிறு அன்று மெரினாவில் நடைபெறவுள்ள வான் சாகச நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பார்வையிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் அக்டோபர் மாதம் 18ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பருவ மழைக்கான பேரிடர் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மழையின் காரணமாக சென்னையில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பாக மீட்க 36 படகுகள் வாங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற மாணவர்களுக்கான குறும்பட போட்டியில், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தினை இயக்கியமைக்கான விருதை நடிகர் சூர்யாவின் மகள் தியா தட்டிச் சென்றுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்குகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.