News 5 
செய்திகள்

News 5 – (12.10.2024) வசூல் வேட்டையில் 'வேட்டையன்' திரைப்படம்!

கல்கி டெஸ்க்

பல்லாயிரக்கணக்கானோர் பணி நீக்கம்: போயின் நிறுவனம் அதிரடி!

Boeing

நிதி நெருக்கடி காரணமாக 17,000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒரு மாதமாக நீடிக்கும் நிலையில், போயிங் நிர்வாகம் இந்த அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கவரப்பேட்டையில், சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து!

train accident

ர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டு, ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீசார், ஆர்.பி. எஃப் போலீசார் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதில் காயமடைந்த சுமார் 19 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த MEESHO நிறுவனம்!

MEESHO company

ங்கள் நிறுவன ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது MEESHO நிறுவனம். வெற்றிகரமான பண்டிகைக் கால விற்பனையைத் தொடர்ந்து, வரும் 26ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை லேப்டாப், மெயில், மீட்டிங் என எந்த தொந்தரவும் இல்லாமல் ஊழியர்கள் தங்களின் விடுப்பைக் கொண்டாடலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வசூல் வேட்டையில் 'வேட்டையன்' திரைப்படம்!

'Vetaiyaan' movie

சூர்யாவை வைத்து 'ஜெய் பீம்' வெற்றிப் படத்தை கொடுத்து மக்களின் பார்வைக்கு வந்தவர் இயக்குநர் ஞானவேல். அப்பட வெற்றி அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பை கொடுத்தது. அந்த வகையில், தற்போது ரஜினியை வைத்து 'வேட்டையன்' என்ற படத்தை அவர்  இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்றோர் நடித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியானது. ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 20 கோடி ரூபாய்க்கும் மேல், உலகம் முழுவதும் 72 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருக்கிறது. தற்போது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் 'வேட்டையன்' படம் 120 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய அணியின் துணை கேப்டனாக 'ஜஸ்பிரித் பும்ரா' நியமனம்!

'Jasprit Bumrah'

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் 'ஜஸ்பிரித் பும்ரா' நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில், அணியை பும்ரா வழிநடத்துவார் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT