News 5 
செய்திகள்

News 5 – (16.09.2024) 'வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா!

கல்கி டெஸ்க்

மியான்மர் மழை வெள்ளத்துக்கு 113 பேர் பலி!

Myanmar

மியான்மரில் தற்போது புயல், மழை, வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மியான்மர், வியட்னாம், தாய்லாந்து பகுதிகளில் வீசிய கடும் புயலில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் பல பாலங்கள் இடிந்துள்ளன. அங்கு மின்சாரம் மற்றும் இணையதள வசதி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 113 பேர் அங்கு பலியாகியுள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால், மீட்புப் பணிகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

கேரளாவில் நிபா வைரஸ்: கட்டுப்பாடுகள் தீவிரம்!

Nipah virus

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் நிபா வைரஸ் குறித்து விழிப்புடன் இருக்க அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

105 degrees Fahrenheit

தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால், தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'வேட்டையன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

'Vettaiyan'

டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'வேட்டையன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளதாக அப்படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை!

India team

ங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு முறை எடுக்கும் டிக்கெட்டை வைத்து 5 நாட்களும் போட்டியை காணலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT