News 5 
செய்திகள்

News 5 - (16.10.2024) சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்!

கல்கி டெஸ்க்

சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட்!

Rain

சென்னை மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் மீண்டும் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் ரெட் அலர்ட். சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட பதிவை நீக்கிய நிலையில், மீண்டும் அதே அலர்ட்டை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது சென்னைக்கு 280 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உள்ளதால் புயலாக மாற வாய்ப்பில்லை எனவும், வடகிழக்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

சென்னைக்கு மட்டும் 10 மீட்புக் குழுக்கள்!

Chennai rescue teams

டகிழக்கு பருவ மழை காலங்களில் தென் மாநிலங்களுக்கு உதவ மீட்பு குழுக்களை அமைத்தது இந்திய கடலோர காவல் படை. புதிதாக உருவாக்கப்பட்ட 29 பேரிடர் மீட்பு குழுக்களில் 10 குழுக்கள் சென்னைக்கு என்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாகத் தகவல் அளித்துள்ளது இந்திய கடலோர காவல் படை.

ஒரே நாளில் ஒன்றரை லட்சம் லிட்டர் ஆவின் பால் கூடுதல் விற்பனை!

Aavin

சென்னையில் நேற்று கூடுதலாக ஒன்றரை லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எந்தவித பாதிப்பும் இன்றி கூடுதல் பால் தேவை பூர்த்தி செய்யப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'Love Insurance Kompany' படத்தின் 'தீமா' பாடல்!

'Dheema' song

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில், அனிருத் இசையில் உருவாகும் 'Love Insurance Kompany' படத்தின் முதல் சிங்கிள் 'தீமா' பாடல் வெளியானது.

‘Hall of Fame’ பட்டியலில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்!

deVilliers

ர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் ‘Hall of Fame’ பட்டியலில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸை இணைத்துள்ளது ஐசிசி.

இந்த 5 கேள்விகளை படுக்கை நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் கட்டாயம் கேளுங்கள்! 

புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

எழும்புக்கூடுகள் நிரம்பிய ரூப் குந்த் ஏரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சிறுகதை – பிறவிக்குணம்!

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT