News 5 
செய்திகள்

News 5 – (19.10.2024) த.வெ.க. கட்சி மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்!

கல்கி டெஸ்க்

‘உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமா என்பது தெரியாது’ ரஷ்ய அதிபர் புதின்!

Russian President Putin

க்ரைன் ராணுவத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் போரிட்டுவருவதாகக் குற்றச்சாட்டிய ரஷ்ய அதிபர் புதின், ‘உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுமா என்பது தெரியாது. இருந்தாலும் தொடர்ந்து போராடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

‘திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 50 லட்சம் பக்தர்களுக்கான வசதிகள் நிறைவேற்றப்படும்’  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Udayanidhi Stalin

‘திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் 50 லட்சம் பக்தர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் செய்யப்படும்’ என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதாவது, 37 கோடி ரூபாய் செலவில் திருவண்ணாமலை கோயிலுக்கான பணிகள் நிறைவேறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

த.வெ.க. கட்சி மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்!

Tvk

விக்கிரவாண்டியில் வரும் 27ம் தேதி த.வெ.க. கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், "த.வெ.க. கட்சி மாநாடு முழுவதும் சிசிடிவி கட்டுப்பாட்டில் இருக்கும். மாநாட்டில் நடைபெறும் நல்லவ, கெட்டவை அனைத்தும் கண்காணிக்கப்படும். மருத்துவர்கள், தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் தனித்தனி உடைகளில் இருப்பார்கள். தண்ணீர், டாய்லெட் மற்றும் மருத்துவக் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என த.வெ.க. கட்சியின் பொருளாளர் வெங்கட் மாநாட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் 2வது பாடல் குறித்த அப்டேட்!

Kanguva

டிகர் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும்  26ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும், 'கங்குவா' படத்தின் 2வது பாடல் நாளை மறுநாள் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

மகளிர் டி20 கிரிக்கெட்: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது நியூசிலாந்து அணி!

New Zealand women's team

களிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி. 2வது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.

பகவானுக்கும் அவனது திருநாமத்துக்கும் வேறுபாடும் இல்லை என்பதை உணர்த்தும் கிருஷ்ண துலாபாரம்!

Egg Vs Paneer: புரதச் சத்திற்கு சிறந்தது எது தெரியுமா?

ஒரு நாளில் நாம் உண்ணும் உணவுக்கும் நமது தூக்க முறைமைக்கும் என்ன சம்பந்தம்?

துலா ஸ்நானத்துக்கு மட்டும் ஏன் இத்தனை மகிமை?

Manju Warrier Beauty tips: மஞ்சு வாரியர் அழகின் ரகசியம்!

SCROLL FOR NEXT