News 5 
செய்திகள்

News 5 – (21.09.2024) ‘வலிமையான அரசியல் பாதை’ விஜய் அறிக்கை!

கல்கி டெஸ்க்

இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

Prime Minister Modi

ந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெறுகிறது. ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க பாரதப் பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார்.

குரூப் 4 பதவிகளில் பணியிடங்கள் அதிகரிப்பதாக தகவல்!

TNPSC

ரசின் பல்வேறு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், குரூப் 4 பதவிகளில் 6,724 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும்  பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைக்கப்போவதாக விஜய் அறிக்கை!

Thalapathy Vijay

‘தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்படும்’ என விஜய் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெறவிருக்கும் அந்த அரசியல் மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைக்கப் போவதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘நந்தன்' படம் குறித்து நடிகர் சூரி பாராட்டு!

Nandan Movie

சிகுமார் நடிப்பில் நேற்று வெளியானது ‘நந்தன்’ திரைப்படம். இத்திரைப்படம் குறித்து நடிகர் சூரி கருத்துத் தெரிவிக்கையில், “திருப்பி அடிக்காத பாட்ஷாவை பார்த்ததுபோல் உள்ளது. ரொம்ப சூப்பரா இருக்கு. நிறைய இடங்களில் உங்களை அறியாமல் கைத்தட்டுவீர்கள், அழுவீர்கள், விசில் அடிப்பீர்கள். ஒரு சிறப்பான படம் பார்த்த அனுபவத்தைத் தரும்” என்று இவர் பாராட்டுத் தெரிவித்து இருக்கிறார்.

12,000 சர்வதேச ரன்களைக் கடந்து கோலி சாதனை!

Virat kohli

ட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து 12,012 ரன்கள், 219 போட்டிகள், 38 சதங்கள் எடுத்து, 12,000 ரன்களை எட்டிய 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. அதோடு, இந்திய அளவில் 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த வகையில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 14,192 ரன்கள், 258 போட்டிகள், 40 சதங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT