News 5 
செய்திகள்

News 5 – (26.10.2024) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'லப்பர் பந்து' திரைப்படம்!

கல்கி டெஸ்க்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Parliament Winter Session

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25ம் தேதி தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்படக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் இலவசமாக செல்வதற்கு அனுமதி!

tolls

ண்டிகைக் காலங்களில் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானால், இலவசமாக செல்வதற்கு அனுமதிக்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. கட்சி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு தயாராகும் ஸ்நாக்ஸ்!

Tvk

த.வெ.க. கட்சி மாநாட்டிற்காக இயக்கப்படும் பேருந்துகளில் தொண்டர்களை ஏற்றும்போதே அவர்கள் மது அருந்தவில்லை என்பதை உறுதி செய்ய நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாளை த.வெ.க. கட்சி மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகளை பேக் செய்யும் பணிகளில் கட்சி தொண்டர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில் போடப்பட்ட மொத்தம் 11 லட்சம் பாக்கெட்டுகள் தாயாராகின்றன.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும்  'லப்பர் பந்து' திரைப்படம்!

Lubber Pandhu Movie

மிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் 'லப்பர் பந்து.' இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இத்திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'லப்பர் பந்து' திரைப்படம் வருகிற 31ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி!

The New Zealand team

ந்திய அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி உள்ளது நியூசிலாந்து அணி. 4,331 நாட்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய கிரிக்கெட் அணி.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT