அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விவாத விதிகளை சுட்டிக்காட்டி அதில் பங்கேற்பதை தவிர்த்து வந்த டிரம்ப் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இந்த விவாத நிகழ்வை ஏபிசி நியூஸ் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்கள் இல்லாமல், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இருவரும் கையில் குறிப்புகள் ஏதும் இன்றி விவாதத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இந்திய ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வாரியத்தின் தற்போதைய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெய வர்மா சின்ஹா ஆகஸ்ட் 31 ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில், சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செப்டம்பர் 1 பதவி ஏற்கிறார்.
கொல்கத்தாவில் பெண்மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதி கேட்டு வன்முறை நடந்து வரும்நிலையில், "மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்” என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அடுத்த வாரம் தொடங்கும் மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இந்த மசோதாவை இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.
செப்டம்பர் 23-ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டு, மாநாடு நடத்த அனுமதிகோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்ததற்காக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஒரு சிறப்பு விருது அளிக்கவுள்ளதாக UEFA (Union of European Football Associations) அறிவித்துள்ளது. UCL வரலாற்றில் ரொனால்டோ 141, மெஸ்ஸி 129, லெவண்டோஸ்கி 94 கோல்கள் அடித்து முதல் 3 இடங்களில் உள்ளனர். ஐரோப்பா கால்பந்து லீக்கை விட்டு சவுதி அரேபியா க்ளப்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரொனால்டோ விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.