2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை முன்னோட்டம், பொருளாதார ஆய்வறிக்கை புள்ளியியல் பின் இணைப்பு ஆகிய 3 அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு (CAD) நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், ரூபாய் ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பதற்கு அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட போதுமான நிதி ஆதாரம் இருப்பதாக நம்புகிறது.
இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இறக்குமதிக்கு டாலரில் பேமெண்ட் செலுத்தப்படும் வேளையில், டாலர் அதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும்.
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கலாம் என்று பொருளாதார ஆய்வு 2023 எச்சரித்துள்ளது.
பொருளாதார ஆய்வு 2023, அடுத்த நிதியாண்டில் நாமினல் ஜிடிபி அளவு 11% வளரும் என்று எதிர்பார்க்கிறது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் அதிர்ச்சியிலிருந்து இந்தியா வேகமாக மீண்டு உள்ளதாக பொருளாதார ஆய்வு 2023 கூறியுள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த 3 அறிக்கைகளையும் ஆங்கிலம் மற்று ஹிந்தி மொழியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.