Editor 1
செய்திகள்

எதிர்க்கட்சிகள் கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது!

ஜெ.ராகவன்

திர்க்கட்சிகள் கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த 23 ஆம் தேதி பிகார் மாநில முதல்வரும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பவருமான நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டணியின் அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆலோசனைக்கூட்டம் சிம்லாவுக்கு பதிலாக பெங்களூருவில் நடைபெறும் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை குறிவைத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்த பவார், முதலில் மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை கொண்டுவரட்டும். அதன் பிறகு பொது சிவில் சட்டம் பற்றி பேசட்டும் என்று கூறினார்.

வன்முறை காரணமாக மணிப்பூர் தீப்பற்றி எரிகிறது. அங்கு நிலைமையை கட்டுக் கொண்டுவர மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது குறித்து அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பிரதமர் மோடிக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் புனேயில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பவார் கூறினார். பொது சிவில் சட்டம் குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்லமுடியாது. பல்வேறு சமூகத்தினரிடம் விவாதித்த பின்னர்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி இதுபற்றி ஒரு முடிவுக்கு வரும் என்றார். ஆனால், அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் மகளிர்க்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. முதலில் அதை மத்திய அரசு நிறைவேற்றட்டும் என்றார் பவார்.

2019 இல் அஜித் பவார் தலைமையில் தேசிவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியமைக்க இருந்த திட்டம் குறித்து சரத் பவாருக்கு முன்னரே தெரியும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, இதுபோன்ற கருத்துக்களை பேசுவதற்கு முன்னதாக அவர் முதலில் மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தட்டும் என்றார் பவார்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT