Pancard 
செய்திகள்

PAN-2.0; புதிய பான்கார்டு திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்

மணிமேகலை பெரியசாமி

இந்தியாவில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பான்கார்டில் பல ஆண்டுகளாக எந்தவொரு அப்டேட்டும் கொண்டு வராமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பான்கார்டு பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவானது (Cabinet Committee on Economic Affairs - CCEA) வருமான வரித்துறையின் கீழ் வரும் PAN-2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

PAN-2.0 திட்டம் ரூ.1,435 கோடி செலவின் கீழ் உருவாக உள்ளது. பொருளாதார விவரங்களுக்கான அமைச்சரவை வெளியிட்ட தகவல்களின் படி, Pan -2.0 திட்டத்தின் கீழ், புதிதாக QR கோடு அமையப்பெற்ற பான்கார்டு வழங்கப்படும். இந்த டிஜிட்டல் மேம்பாடு, பல்வேறு அரசு சேவைகளை எளிதாக்குவதோடு, வரி செலுத்துபவர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும்.

PAN-2.0 திட்டம், பான்கார்டு வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் போன்ற பான்கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் நவீனமாக்குதல் மற்றும் வரி செலுத்துபவர்கள் தடையற்ற டிஜிட்டல் சேவை அனுபவத்தைப் பெற வழிவகுத்தல் போன்றவற்றை இலக்காக கொண்டு உருவாக்கப்படுகிறது.

தற்போது, பான்கார்டு வைத்திருப்பவர்கள், புதிய QR code கொண்ட பான் கார்டு பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த PAN-2.0 திட்டத்தின் கீழ், அவர்களுக்கு QR code கொண்ட பான்கார்டு இலவசமாக அப்கிரேட் செய்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், PAN-2.0 திட்டம், வரி செலுத்துபவர்களின் பதிவு சேவைகளில் (Taxpayer registration services) தொழில்நுட்பம் சார்ந்து, 4 முக்கிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. அவையாவன,

1. மேம்பட்ட தரம், விரைவான சேவை மற்றும் அணுகும் தன்மையை எளிமையாக்குதல்.

2. டேட்டா (Data) நிலைத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாக விளங்குதல்.

3. துரிதமான பாதுகாப்பு மற்றும் அதன் மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பை கொண்டிருத்தல்.

4. காஸ்ட் ஆப்டிமைசேஷனுக்கு வழிவகுத்தல்.

மேலும், இந்த திட்டத்தின் கீழ், பான்கார்டு ஒரு பொதுவான வணிக வழிகாட்டியாக மாறும். இதற்காக, முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் இயங்கக்கூடிய ஒரு ஒருங்கிணைத்த போர்டல் உருவாக்கப்படும். குறை தீர்க்கும் முறைக்கு (Grievance redressal system) முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

SCROLL FOR NEXT