கனமழை  
செய்திகள்

கோடையில் வெளுத்து வாங்கிய மழை ... வெயில் தணிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி!

கல்கி டெஸ்க்

சென்னையில் நேற்று காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சென்னையில் கோடம்பாக்கம், நுங்கம் பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் படாளம் பகுதியில் பெய்த மழையால், அங்குள்ள அரசின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின. நெல்மணிகள் முளை விடும் சூழல் ஏற்பட்டுள்ளதால், நனைந்த மூட்டைகளை அரிசி ஆலைகளுக்கு விரைந்து எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுகளில் மழை கொட்டித்தீர்த்தது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று முதல் , காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் பகுதியில் 10.6 செ. மீ. மழையும், கோவை மாவட்டம் வால்பாறையில் 7.8 செ. மீ. மழையும் பதிவானதாக குறிப்பிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 7.3 செ. மீ. மழையும், காஞ்சிபுரம் மாவட்டம் சத்தியபாமா பல்கலைக்கழக பகுதியில் 7 செ. மீ. மழையும் பெய்ததாக தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூரில் 6.8 செ. மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்னும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT