ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால், இந்திய மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், ஈரான் தூதர் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 11 மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கு உதவியாக ஹிஸ்புல்லா இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் ஈரான் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அமைப்புகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத பட்டியலில் இணைத்துள்ளனர்.
காசாவிற்கு ஆதரவாக ஈரான் செயல்பட்டு வருவதோடு பல உதவிகளையும் செய்து வருகிறது. ஒருமுறை இஸ்புல்லா அமைப்பைத் தாக்க நினைத்த இஸ்ரேல், ஈரான் தூதரகத்தைத் தாக்கியது. இதனால் கோபமான ஈரான் நேரடியாகவே களத்தில் இறங்கி இஸ்ரேலை தாக்கத் டொடங்கியது. அப்படியான நிலையில், இஸ்ரேல் – ஈரான் போர் உருவானது.
அதுமுதல் இரு நாடுகள் பதில் தாக்குதலை மாறி மாறி நடத்தி வருகின்றன. ஆனால், ஈரானுக்கு செல்லும் சுற்றுலா வாசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், சுற்றுலாத்துறை சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்திய மக்கள் ஈரான் செல்வதை முற்றிலும் தவிர்த்துவிட்டனர். ஆகையால், ஈரானுக்கு சுற்றுலா வருமானம் குறைந்துவிட்டது.
இதுதொடர்பாக ஈரான் தூதர் இராஜ் இலாஹி பேசியிருக்கிறார்.
“இஸ்ரேல் – ஈரான் போர் ஒன்றும் புதிதல்ல. பல காலமாக நீடித்து வருவதுதான். இந்த போர் பதற்றம் ஈரானை பாதிக்காது. ஆகையால், சுற்றுலா பயணிகளும் இந்திய நண்பர்களும் ஈரான் வர வேண்டும். ஈரான் எவ்வளவு பாதுகாப்பானது என்று அவர்களாகவே பார்க்க முடியும். ஈரான் அழகான மற்றும் கவரக்கூடியதாகும். டெல்லி- தெஹ்ரான் இடையே இரண்டு நேரடி விமான சேவை உள்ளது. இன்னும் அதிகமான விமான சேவையை தொடங்கவுள்ளோம்.” என்று பேசினார்.