செய்திகள்

ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம்... இளம் பயறு வகை இழப்பீடாக ரூ. 3 ஆயிரம்! தமிழக அரசு இழப்பீடு!

கல்கி டெஸ்க்

தமிழ்நாட்டில் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீர் சூழ்ந்து நாசமானது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். நாசமான நெற்பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் வழங்கப்படும். நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடைசி வாரத்திலும், இம்மாதம் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களை மழை நீர் சூழ்ந்து, சேதம் ஏற்பட்டது.

பருவம் தவறிய கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் உணவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மூத்த அதிகாரிகளை பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திடவும், விவசாயகளிடம் நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறியவும் உத்தரவிட்டார்.

சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு , விவசாயிகளிடம் கருத்து கேட்ட பின் அமைச்சர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கனமழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பின்வரும் நிவாரணத் தொகுப்பினை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை நேரடிக் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்திடும்போது, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 22 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உரிய தளர்வுகளை வழங்கிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நேற்று ( 5.2.2023 ) கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT