செய்திகள்

சென்னைக்கு வருகை தரவிருக்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

கல்கி டெஸ்க்

ந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல் முறையாக அரசு முறைப்பயணமாக தமிழகம் வருகை தரவிருக்கிறார். குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு சென்ற முறை தமிழகம் வருகை தந்த திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ஈஷா யோகா மையத்தைக் காண்பதற்காக தமிழகம் வந்திருந்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வருகை தர இருக்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி முர்மு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்க்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

அரசு முறைப்பயணமாக சென்னைக்கு வருகை தரும் இந்தியக் குடியரசுத் தலைவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

ஏற்கெனவே கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை கிண்டியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழாவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்து மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் குடியரசுத் தலைவரால் அப்போது தமிழகத்துக்கு வருகை தர முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில், தற்போது சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ள தமிழகம் வருகை தர இருப்பது குறிப்பிடத்தக்கது.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT