கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் பெனடிக் ஆண்டோவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக் ஆண்டோ. அவருக்கு வயது 30. இவர் குழித்துறையை தலைமையிடமாகக்கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சமீபத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வந்தது.இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் பாதிரியார் மீது புகார் அளித்திருந்தார்.
பாதிரி தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பாதிரியார் கடந்த 20 ஆம் தேதி நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவை பெண் ஒருவரின் புகாரையடுத்து கைது செய்தனர் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் பாதிரியாரை மீண்டும் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க திட்டமிட்டனர். அதன் அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியாரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின் மீண்டும் இன்று மாலை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மறுபடியும் சிறையில் அடைக்க உள்ளனர்.