நீலகிரி மாவட்டம், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா மற்றும் அரசு பண்ணைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து 10- ஆம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பூங்காக்களை தயார் படுத்தும் பணியில், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர்.
உதகை தாவரவியல் பூங்காவிற்குள் பூங்கா ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு உள்ள பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நீலகி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, சின்ஸ் பூங்கா உள்ளிட்ட பூங்காவில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் , 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்,
அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் , தாவரவியல் பூங்காவில் 10வது நாளாக உள்ளிருப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று மாலை வரை நடைபெற்ற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டமானது பூங்கா நிர்வாகம் தங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அவரகள் தெரிவித்துள்ளனர். இதனால், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்களின் பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.