அமெரிக்கா ஒரு நூற்றாண்டு காலமாக உலக அரங்கில் பெரிய அண்ணனாக கோலோச்சி வருகிறது. அது எப்போதும் சர்வதேச நாடுகளின் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அரபு நாடுகளின் உயர்ந்த பொருளாதாரத்திற்கு முக்கிய காரணமே அமெரிக்கா தான். கியூபா, வட கொரியா போன்ற நாடுகளில் உணவுக்கு வழியில்லாமல் செய்ததும் அமெரிக்கா தான்.
ஒரு நாட்டின் அமைதியை உருவாக்குவது மட்டுமல்ல ஒரு நாட்டின் அமைதியை கெடுக்கவும்,அந்த நாட்டை வறுமையில் வாட வைக்கவும் அமெரிக்காவால் முடியும். அமெரிக்கா நினைத்தால் காரணம் மின்றி எந்த நாட்டையும் தாக்கும்,தாக்கப்பட்ட நாட்டின் மீதே உலக மீடியாக்களை வைத்து குற்றம் சுமத்தும்.அத்தகைய ஒரு நாட்டின் அதிபர் பதவிக்கு தான் 6 மாதங்கள் களேபரம் நடந்தது.
2016 இல் அதிபர் பதவியேற்ற டிரம்ப், தனது ஆட்சி காலத்திற்கு முன்பே அமெரிக்கா செல்வாக்கை இழந்து கொண்டிருந்தது.டிரம்ப் அதிபர் ஆனதும் அமெரிக்காவின் பழைய செல்வாக்கை மீட்டுக் கொண்டு வர பெரும் முயற்சிகள் செய்தார்.மற்ற அதிபர்கள் வாய் திறக்காமல் போர் புரிவார்கள்.ஆனால், டிரம்ப் மிரட்டல் பேச்சுக்களால் மற்ற நாடுகளை எப்போதும் பயமுறுத்திக் கொண்டே இருந்து ,அதன் மூலம் அடி பணிய வைப்பது அவரது பாலிஸி.எப்போதும் தான் உயர்ந்தவன் என்ற அகங்காரமும் டிரம்பிற்கு உண்டு.எப்போதும் சலசலப்பும் சர்ச்சையையும் உண்டாக்கும் மனிதன்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் உலக நாடுகளின் அமைதி நிலவியது.வழக்கமாக பாகிஸ்தானுக்கு தரும் நிதியையும்,ஆயுத வழங்கலையும் டிரம்ப் நிறுத்தியதால் இந்திய எல்லையில் அமைதிக்கு அதுவும் ஒரு காரணமாகியது.இதற்கு மாறாக பிடேன் பாகிஸ்தானுக்கு நிதியையும் ஆயுதத்தையும் வழங்கினார்.
டிரம்ப் ஆட்சி காலத்திலும் உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காஸா பிரச்சனைகள் இருந்தது. ஆனாலும் பெரிய அளவில் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை.
கூடுமான வரையில் சீனாவை மட்டுப் படுத்தி வைத்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிராக கொக்கரிக்கும் வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜானை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது போன்றவை டிரம்பின் சர்வதேச செல்வாக்கை உயர்த்தியது.
அமெரிக்காவில் புதிய குடியேற்றங்களுக்கு டிரம்ப் கடுமையான கட்டுப்பாடு விதித்தார்.இது உலகளவில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.டிரம்பின் வெளிப்படையான மாற்றுமத விரோதப் பேச்சு ,இலுமினாட்டிகளுக்கு எதிரான போக்குகள் ஆகியவற்றால் டிரம்ப் மீது எதிர்மறை பிம்பம் மீடியாக்களால் உருவாக்கப்பட்டது.பெண்கள் விஷயத்தில் தனது பலவீனத்தை பொதுவெளியில் டிரம்ப் வெளிப்படுத்தித்தால் வெறுப்புக்கு ஆளாகினார்.டிரம்பிற்கு கடுமையான எதிர்ப்புகள் உள்நாட்டில் உருவாகி அடுத்த தேர்தலில் தோல்வியடைய வைத்தது.
இம்முறை டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ் என்ற போட்டி உருவாகியது. இதில் துணை அதிபர் கமலா ஹாரிசின் செல்வாக்கு, அவரது திறமையான பேச்சுக்கள், நாகரீகமான நடத்தைகள் இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பிரச்சாரங்கள், தற்போதைய ஆட்சியில் நடைமுறை படுத்தாததால் நம்பகத் தன்மையை குறைத்தது. ரஷ்ய - உக்ரைன் போரில் நேரடியாக உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்காதது, இஸ்ரெல் - அரபு சண்டையில் தலையிடாதது போன்றவை அமெரிக்காவின் செல்வாக்கை கேள்விக் குள்ளாக்கியது. ரஷ்ய - இந்திய - சீன கூட்டணிகள் உருவானது, டாலருக்கு எதிராக மாற்றை அவர்கள் யோசிப்பதும் அமெரிக்காவின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.
தற்போதைய தேர்தலில் 'முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு' பிடேன் நிர்வாகம் பாதுகாப்பில் தோல்வியுற்றதை காட்டியது. மீண்டும் மீண்டும் டிரம்ப் மீது தாக்குதல் நடக்க டிரம்ப் மீது அது அனுதாபமாக மாறியது. அதிகப்படியாக விமர்சனத்திற்கு ஆளான டிரம்ப்பிற்கு, அந்த எதிர்மறை விளம்பரமே செல்வாக்காகவும் மாறியது. இந்திய வம்சாவளியான கமலா தன்னை இந்தியராக சரியாக வெளிப்படுத்தவில்லை. மாறாக டிரம்ப் இந்தியாவுக்கு ஆதரவாக பேசினார். பாதிக்கப்பட்ட வங்கதேச, கனடிய ஹிந்துக்களுக்கு ஆதரவான அவர் பேச்சு, அமெரிக்க இந்தியர்களையும் அவர் பக்கம் திருப்பியது. வெற்றிக்கு வழி வகுத்தது.