செங்கல்பட்டு மாவட்டம் ஓடியம்பக்கத்தில் இருந்து சென்னை கிண்டி வரை 400 கிலோ வோல்ட் திறனில் மின் கோபுரம் மற்றும், 'கேபிள்' மின் வழித்தடம் அமைக்கும் முடிவடைந்தது.
இதன் வாயிலாக அந்த வழித்தடத்தில் சென்னைக்கு கூடுதலாக 800 மெகா வாட் மின்சாரத்தை எடுத்து வந்து, வினியோகிக்க முடியும். ஒட்டியம்பாக்கம் 400 கி.வே., துணைமின் நிலையத்திற்கு, தென் மாவட்டங்களில் இருந்து காற்றாலை மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.
ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி துணைமின் நிலையம் இடையே 9 கி.மீ., துாரமும், பெரும்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி ரயில் நிலையம் வரை 9 கி.மீ., தூரமும் தரைக்கு அடியில் கேபிள் வழித்தடம் அமைக்கும் பணி நடந்து வந்தது.
வேளச்சேரி கிண்டி வழித்தட பணி இரு மாதங்களாக இறுதி கட்டத்தை எட்டியது. இதன் காரணமாக, கத்திப்பாரா, கிண்டி இடையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தற்போது, கேபிள் அமைக்கும் பணி முடிவ டைந்ததை அடுத்து, வேளச்சேரி - கிண்டி வழித் தடம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வரும் பணிகளுக்கான பரிசோதனை துவங்கியுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து ஒட்டியம்பாக்கத்திற்கு எடுத்து வரப்படும் மின்சாரம், விரைவில் கிண்டி துணைமின் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக, மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறினார்கள்.