மாதிரி படம்
மாதிரி படம் 
செய்திகள்

ஆடி மாத பூஜையொட்டி சபரிமலை நடை திறப்பு.. 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி!

விஜி

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அந்த கோவில் நடை திறப்புக்காக பக்தர்கள் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், ஆடிமாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலின் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூத்ரி நடையை திறந்து வைத்தார்.

நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை வழிபாட்டுக்காக அனுமதிக்கப்படுவார்கள். 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை, அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவசாரனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.

ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை ஆகியவையும் இந்த 5 நாட்களில் நடைபெற உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அத்தாழ பூஜைக்கு பிறகு, அரிவராசனம் பாடல் பாடப்பட்டு இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட இருக்கிறது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT