செய்திகள்

‘பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே ஆசியப் போட்டிகளில் பங்கேற்பு’ சாக்‌ஷி மாலிக் திட்டவட்டம்!

கல்கி டெஸ்க்

ந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வீட்டில் கடந்த புதன் கிழமையன்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது,
சாக்‌ஷி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சருடனான இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, ‘நாங்கள் அமைச்சருடன் சில விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அதையடுத்து, பிரிஜ் பூஷன் மீதான போலீசாரின் விசாரணை இம்மாதம் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அதனால் இந்த விசாரணை முடியவடையும் வரை போராட்டம் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் எங்களிடம் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நாங்களும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருக்கிறோம்’ என்று கூறினார்.

இந்த நிலையில், இன்று சோனிபட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ‘நாங்கள் ஒவ்வொரு நாளும் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம் என்பதை பிறரால் உணர முடியாது. பிரிஜ் பூஷன் மீதான எங்களது பாலியல் புகார் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே நாங்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்போம். உளவியல் ரீதியாக மல்யுத்த வீராங்கனைகள் எத்தகைய பாதிப்புகளைச் சந்தித்து உள்ளனர் என்பதை அரசு உணரவில்லை’ என்று சாக்‌ஷி மாலிக் திட்டவட்டமாகக் கூறி இருக்கிறார்.

புதிய முதலீட்டாளர்களே! மியூச்சுவல் ஃபண்ட்களில் இதையும் கொஞ்சம் கவனியுங்கள்!

கடலில் வாழும் விநோத ஒட்டுடலி உயிரினம் கொட்டலசுக்கள் பற்றி தெரியுமா?

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை குதூகலிக்க வந்த வடிவேலு... கலகலப்பான ஷோவின் அசத்தல் புரோமோ!

ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்... இந்தியன் 3 ரிலீஸ் தேதியும் அறிவிப்பு... எப்போது தெரியுமா?

சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்... ரீ-ரிலிசாகும் சூப்பர் படம்!

SCROLL FOR NEXT