செய்திகள்

பெற்றோரை இழந்த சேலம் மாற்றுத்திறன் மாணவிக்கு அரசின் பசுமை வீட்டு திட்டத்தில் வீடு!

சேலம் சுபா

ரு இளம் பெண்ணுக்கு கல்வியும் பெற்றோரின் அரவணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். ஆனால் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவியான அமுதா சமீபத்தில் சாலை விபத்தில் பெற்றோரையும் சகோதரியையும் இழந்து வேதனையில் உள்ளார்.

இவரைப்பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் இவர் மீதான கவனத்தை  முதல்வரிடம் கொண்டு செல்ல, தற்போது அரசின் உதவிகள் அனைத்தும் இந்த மாணவியைத் தேடி வந்துள்ளது கண்டு சேலம் மக்கள் வேதனையிலும் ஆதரவுக்கரம் தந்த அரசின் செயலை நினைத்து பாராட்டுகின்றனர்.

சாலை விபத்தில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவிக்கு ரூபாய் 2.48 லட்சத்தில் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியர்  கார்மேகம் வழங்கினார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த கல்பாறை பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் . இவர் தறித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள் மற்றும் மூத்த மகள் பூங்கொடி ஆகியோர் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றிய செய்திகளும் நிராதரவாக நின்ற மாணவி அமுதாவைப் பற்றியும் அறிந்த நல்ல உள்ளம் கொண்டவர்கள் சமூகவலைத்தளங்களில் அவருக்குத் தேவையான உதவிகளைக் கோரி பதிவு செய்தனர். பெற்றோர் மற்றும் சகோதரியை இழந்த வெங்கடாச்சலத்தின்  இரண்டாவது மகளான மாற்றுத்திறனாளி மாணவி அமுதா +2 பொதுத்தேர்வில் 584 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு பிரமுகர்கள் அமுதாவுக்கு உதவிகளை வழங்க முன்வந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான உதவிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி அமுதாவுக்கு அரசு சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2.48,460 மதிப்பிலான வீடு கட்டி வழங்குவதற்கு உரிய ஆணையை ஆட்சியர் அமுதாவிடம் வழங்கினார்.

வீடு கட்டும் பணிகள் அரசின் சார்பில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் மூலம் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். ஏற்கனவே வானவில் அமுதாவுக்கு கல்லூரியில் சேர்வதற்கான கட்டணச் செலவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வைகளை தமிழ்நாடு அரசின் சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்று தேவையான உதவிகள் செய்யப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து வீடு வழங்கியது அனைவரையும் மகிழவைத்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டிஆர்ஓ மேனகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது போல் உடனடி உதவிகள் தேவைப்படும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கும் விரைவாக அரசு செய்யும் உதவிகள் பெரும்  மதிப்பு மிக்கவை.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT