கத்தார் நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரியான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி செவ்வாய்கிழமை அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் 2016 முதல் கத்தார் நாட்டின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார் மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகியவற்றின் 3 1/2 வருட பொருளாதாரப் புறக்கணிப்பு காலக்கட்டத்தில் கத்தார் நாட்டின் வழிநடத்திய தலைவர்களில் முகமது பின் அப்துல்ரஹ்மான் மிகவும் முக்கியமானவர்.
2020 முதல் இப்பதவியில் இருந்த கத்தார் நாட்டின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல் அஜீஸ் அல் தானிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார் என கத்தார் நாட்டின் அரசு ஊடகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கத்தாரின் ஆளும் அமீர், ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தான் உயர் பதவிகளில் இருப்பவரை நியமிப்பார். பொதுவாக கத்தார் நாட்டின் உயரிய அரசு பதவிகளில் ஆளும் அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தான் நியமிக்கப்படுவார்கள். மற்ற வளைகுடா அரபு நாடுகளைப் போலவே, அரசியல் பெரும்பாலும் ஆளும் குடும்பத்துடன் மட்டுமே உள்ளது, இதனால் அரசு குடும்பத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் குறித்து எப்போதும் பொதுவெளியில் வெளியிடுவது அரிது.
இந்த நிலையில் அல் அதானி குடும்ப உறுப்பினர்கள் தான் அந்நாட்டின் அனைத்து அரசு பதவிகளிலும் இருப்பார்கள், இது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் தற்போது புதிகாக கத்தார் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி.