அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்களின் விலை, இந்த ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகம் இருக்கும் என ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா காலத்திற்கு பிறகு ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு உலகெங்கிலும் மிகவும் அதிகமானது. பள்ளிப் போகும் மாணவர்கள் முதல் வேலைக்குப் போகும் இளைஞர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். மேலும் வீட்டில் இருக்கும் முதியவர்கள் கூட ஸ்மார்ட் போன் வாங்கி அப்டேட் ஆனார்கள். இதனால் பட்டன் போன்களின் பயன்பாடு மிகவும் குறைவானது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யத் தொடங்கினர்.
அதற்கேற்றவாரு விலையையும் கூட்டினர். இப்போது ஒரு மிடில் க்ளாஸ் சிறுவன் வைத்திருக்கும் குறைந்தபட்ச ஸ்மார்ட் போனின் விலை 10 ஆயிரம். இப்படியாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் வருகிற 2025ம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இந்த ஆண்டு விட 5 சதவிகிதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விலை உயர்வுக்கு காரணம் AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வொர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் அதிகரிப்பு என கூறப்படுகிறது.
இதுகுறித்தான அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது. “2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம்.
உலக மக்கள் இப்போது மேம்படுத்தப்பட்ட ப்ராசசர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் அடங்கியுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்கே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
AI அம்சங்கள் நிறைந்த போன்களின் விலை, குறிப்பாக Generative AI அம்சம் பொருந்திய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால், ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், NPU, CPU மற்றும் GPU சிப்கள் கொண்ட போன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தச் சிப்புகள் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் GenAI தொழில்நுட்பங்களை அளிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனவாம்.
இதுபோன்ற காரணங்களால்தான் ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் விலையை அதிகரிக்கின்றன."