தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இன்று சமர்ப்பிக்கப்பட்ட தமிழக பட்ஜட்டில் குறிப்பிடத்தக்க பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தது. அதில் வரும் 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாட்டின் மொத்த கடன் குறித்த விபரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கடன்கள் குறித்த அறிக்கையை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ள தகவல்கள்:
அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் வரவுகள் மற்றும் திரும்பச் செலுத்துதல் மதிப்பிடப் பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் மாநில அரசு 143,197.93 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
மேலும், 51,331.79 கோடி ரூபாய் பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2024 அன்று நிலுவையில் உள்ள கடன் 726,028.83 கோடி ரூபாயாகும். 2023-24ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் இது 25.63 சதவீதம் ஆகும்
மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் சதவீதத்தில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் 2024-25 ஆம் ஆண்டில் 25.63 சதவீதமாகவும், 2025-26 ஆம் ஆண்டில் 25.82 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.