செய்திகள்

சோலார் பேனல் இறக்குமதி வரி குறைகிறது - சாமானியர்களுக்கும் சாத்தியமாகும் சூரிய ஒளி அடுப்புகள்?

ஜெ. ராம்கி

சோலார் பேனல் என்னும் சூரிய ஒளி அடுப்புகளுக்கு விதிக்கப்படும இறக்குமதி வரியை பாதியாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. கூடவே சோலார் பேனலுக்கான ஜி.எஸ்.டி வரியையும் குறைப்பதன் மூலமாக இன்னும் பரவலாக மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பித்தக்க ஆற்றலுக்கான அமைச்சகமும் நிதியமைச்சகமும் சாமானியர்கள் மத்தியில் சோலார் பேனல் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை முன்வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக சோலார் பேனலுக்கான இறக்குமதி வரியை 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கம் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இரு தரப்பும் ஒப்புக்கொண்டால், இது குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படும். 2021ல் சோலார் பேனலுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்கும் முடிவை ஜி.எஸ்டி கவுன்சில் எடுக்கும் பட்சத்தில் சோலார் பேனல் விலை கணிசமாக குறையும் என்கிறார்கள், வணிக சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இறக்குமதி வரியை குறைக்கவேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தும் நிதியமைச்சகம் இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை. புதிய நிதியாண்டில் மாற்றங்கள் செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடந்த 2 மாதங்களாக எந்த முன்னேற்றமுமில்லை.

கோடைக்காலத்திற்கு முன்பே முடிவெடுக்கப்பட்டிருந்தால் சோலார் பேனல் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டிருக்க முடியும். சோலார் பேனல் விலை குறைந்தால் டாட்டா பவர், அதானி க்ரீன், விக்ரம் சோலார் போன்று முன்னணி நிறுவனங்களின் சோலார் பிராஜெக்ட் திட்டங்கள் முழு வீச்சில் நடைபெறும். சோலார் பேனல் சம்பந்தமான பொருட்களின் விலை உயர்வாலும், தட்டுப்பாட்டினாலும் திட்டப் பணிகள் தற்போது மெதுவாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

அடுத்த பத்தாண்டுகளில் சோலார் பேனல் மூலமாக 365 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதுதான் மத்திய அரசின் திட்டம். தற்போது ஆண்டுதோறும் 32 ஜிகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 10 ஜிகாவாட் கூடுதலாக மின்சார உற்பத்தி செய்தால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்.

தற்போதைய சூழலில் நம்மால் 52 ஜிகாவாட் மின்சாரத்தை சோலார் பேனல் மூலமாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால், சோலார் பேனல் விலை உயர்வால் சாமானிய மக்கள் வாங்குவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை விலை குறைந்தால், சாமானிய மக்கள் வாங்குவதற்கு முன்வருவார்கள்.

மேற்கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்தக் கல்… கோடீஸ்வரரான இளைஞர்… இது என்ன கதை?

இயற்கை வைத்தியத்தில் எலும்பு முறிவை சரி செய்யும் ரகசியம்!

புறங்கூறுவோருக்கு பாபாவின் அறிவுரை!

நம்முடைய திறமையை முழுமையாக நம்ப வேண்டும். ஏன் தெரியுமா?

உறக்கத்தையும் இழக்காதீர்கள்: வாழ்வின் உச்சங்களையும் இழக்காதீர்கள்!

SCROLL FOR NEXT