செய்திகள்

ஆஸ்திரேலிய கடற்கரையில் இருந்த மர்மப் பொருள் பற்றிய உண்மை வெளிவந்தது.

கிரி கணபதி

ரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியக் கடற்கரையில் பிரம்மாண்ட அளவில் இருக்கும் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது என்ன என்பது குறித்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென ஒரு மிகப்பெரிய மர்மப் பொருள் கரையொதுங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இது குறித்து பல தகவல்கள் வெளிவந்த நிலையில், அது உண்மையில் என்ன பொருள் என்பது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான பெயர்த்து நகரில் இருந்து 250 கிலோமீட்டர் வடக்கே 'க்ரீன் ஹெட்' கடற்கரை உள்ளது. அங்கு இரு வாரங்களுக்கு முன்பு கடற்கரை அருகே மிதந்து வந்த பொருளை அங்கு வாக்கிங் சென்ற நபர்கள் முதலில் பார்த்தனர். பின்னர் அங்கிருந்து பீச் வாகனத்தின் உதவியுடன் அதை வெளியே எடுத்தனர். அது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததால், முதலில் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. ஒவ்வொருவரும் அது என்ன என்பது குறித்து பல கருத்துக்களைப் பதிவிட்டனர். 

பின்னர் அந்த மர்ம பொருள் குறித்த விசாரணை நடத்தப்பட்டது. அதுவரையில் யாரும் அதன் அருகே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதே நேரம் பலர் அது ஒரு ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும் அது எந்த நாட்டுக்கு சொந்தமானது என்பது குறித்த தகவல் அப்போது தெரியவில்லை. இருந்தாலும் ஒரு தரப்பினர், கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் கூறியிருந்தனர். மேலும் ஒரு சிலர் இது ராணுவ ஆயுதம் என்று கூறினர். இன்னும் சிலர் மாயமான மலேசியன் விமானத்தின் பகுதியாக இருக்கும் என்றும் தெரிவித்த நிலையில், தற்போது அதற்கான விடை ஒரு வழியாகக் கிடைத்துவிட்டது. 

ஆஸ்திரேலியா கடற்கரையில் ஒதுங்கிய அந்த மர்மப் பொருள், இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி என்பது தெரியவந்துள்ளது. இது, ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் போது ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட Debris என்ற பகுதியாகும். குறிப்பாக இந்தியாவின் இஸ்ரோ பயன்படுத்தும் PSLV ராக்கெட்டின் 3rd ஸ்டேஜ் பகுதி. இந்த ராக்கெட் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான ராக்கெட்டாக இருக்கிறது. இதுவரை பல செயற்கைக் கோள்கள் இந்த ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட இந்த ராக்கெட் மூலமாகவே 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 

ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ராக்கெட்டின் பாகம் இதற்கு முன்னதாக அனுப்பப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் ஆஸ்திரேலியாவில் சாட்டிலைட் குப்பைகள் கரை ஒதுங்குவது இது முதல்முறை இல்லை. கடந்த ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய ராக்கெட்டின் பாகம், நியூ சவுத் வேல்சில் உள்ள ஆட்டு மந்தையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT