Swiggy employees
Swiggy employees 
செய்திகள்

ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

கல்கி டெஸ்க்

ஸ்விகி ஊழியர்கள் ஸ்விகி நிறுவனத்தின் புதிய அறிவிப்பை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை ஸ்விகி ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை  நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 மணி நேரமாக இருந்த வேலைநேரம் தற்போது 16 மணி நேரமாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற புதிய மாற்றங்கள் ஊழியர்களை கசக்கி பிழிவதாக உள்ளது என கூறி ஸ்விகி ஊழியர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராடி வருகின்றனர். பழைய நடைமுறையே தொடரவேண்டும் என ஊழியர்கள் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்த  மனுவினை கலெக்டரிடம் அளித்துள்ளனர். தொடர்ந்து பதினாறு மணி நேரம் வேலை செய்வதால் தங்களது குடும்பத்தாரோடு நேரத்தை செலவழிக்க வழியில்லை என வேதனையுடன் தெரிவித்தனர் ஸ்விகி நிறுவன ஊழியர்கள்.

அடுத்து வரும் அலை - T20 உலகக் கோப்பை!

நம்மைச் சுற்றியே இருக்கு நமக்கான வாழ்க்கைப் பாடம்!

ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கு இன்று முதல் இ பாஸ் எடுக்கலாம்!

சுய அன்பு தரும் 9 வித நன்மைகள் பற்றி தெரியுமா?

கோடைக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகள்!

SCROLL FOR NEXT