தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று சொல்லப்படும் தஞ்சாவூரில் தற்போது அரிசி விலை உயர்ந்து வருவது மக்களை பெரும் அளவில் பாதித்துள்ளது.
அரிசியை பொறுத்தவரை பல்வேறு ரகங்கள் காணப்படுகின்றனர். நிறம், அளவு, ருசி, மருத்துவ குணம் பொறுத்து வகைப்படுத்தப்பட்டு விலையில் மாற்றம் இருக்கும். தற்போது அனைத்து வகை அரிசிகளும் கிலோ ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை விலை உயர்ந்து இருக்கிறது. ஏற்கனவே காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை உயர்ந்து இருக்கக்கூடிய நேரத்தில் அரிசியின் விலை உயர்ந்திருப்பது மக்களை மேலும் துயரத்திற்கு அழைத்து சென்று இருக்கிறது.
இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரசினுடைய பயன்பாடு தமிழ்நாட்டில் அதிகம், அதே நேரம் தமிழ்நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல் ரகங்களை தமிழ்நாடு மக்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் அரிசிகள் தான் தமிழ்நாட்டில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது.
தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது, தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக வியாபாரிகள் விலையை உயர்த்தி விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் தொடர்ந்து உயர்ந்து வரும் காய்கறி உள்ளிட்ட விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, கட்டுப்பாடு நிலவும் உணவு பொருட்களை தற்போது விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்தப் பயிர்கள் முலைத்து காயாகவும், கனியாக மாறி பயன் பெற 40 முதல் 60 நாட்கள் ஆகும், இதனால் 60 நாட்கள் வரை விலையற்றம் மக்களை அச்சுறுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை பல்வேறு முடிவுகள் எடுத்திருப்பதாகவும். இதனால் ஓரிரு வாரங்களில் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.