செய்திகள்

‘எல்ஜிஎம்’ பட டீசரை நாளை வெளியிடுகிறார் தல தோனி!

கல்கி டெஸ்க்

'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் மூலம் இந்திய கிரிக்கெட் முன்னாள் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களின் தயாரிப்பில் தற்போது வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் -  ‘லெட்ஸ் கெட் மேரிட்’ (Lets Get Married) ஆகும். எம்.எஸ்.தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உள்ள நட்புப் பிணைப்பை காட்ட, தங்களது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில், அதன் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது. இந்த டீசரை தல தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் ஒன்றாகச் சேர்ந்து வெளியிட உள்ளதாக அந்தப் படக்குழு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக, 'எல்ஜிஎம்' படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT