வேலம்மாள் பாட்டி
வேலம்மாள் பாட்டி 
செய்திகள்

புண்சிரிப்பால் பலரையும் கவர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார்!

விஜி

மிழக அரசின் கொரோனா கால நிவாரணத்தொகை பெற்ற போது, தனது புண்சிரிப்பால்  பிரபலமான 92 வயது வேலம்மாள் பாட்டி வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.

கடந்த 2021 ஜூன் மாதம் கொரோன தொற்று பரவல் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிய நிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா ரூ.2,000 நிவாரணத் தொகையும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.

அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலுங்கடி பகுதியை சேர்ந்த வேலம்மாள் என்ற மூதாட்டியும்  இந்த தொகுப்பையும், உதவித் தொகையையும் பெற்றார். அப்போது மகிழ்ச்சியாக வெளியே வந்த அவரை புகைப்பட கலைஞர் ஒருவர் அழகாக படம் பிடித்தார். இந்த புகைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பரவி இணையத்தில் வைரலானது.

அந்த படத்தினை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அப்போது தனது ட்விட்டரில் பகிர்ந்து, "ஏழையின் சிரிப்பு, நமது அரசின் சிறப்பு" எனப் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட விளம்பரங்களிலும் பொக்கைவாய் சிரிப்புடன் இருக்கும் வேலம்மாள் பாட்டியின் புகைப்படம் இடம்பெற்று வருகிறது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த  வேலம்மாள் பாட்டி  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.  இந்நிலையில் வேலம்மாள் பாட்டியின் மறைவை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தோட்டம் அமைக்க இடம் இல்லையா? தொட்டியே போதும் காய்கறி செடிகளை வளர்க்க!

பெருமாளே, ‘என் அம்மாவே’ என்றழைத்த நடாதூரம்மாள்!

பயமும் பதட்டத்தையும் பறந்தோட வைக்கும் 5 விஷயங்கள்!

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

SCROLL FOR NEXT