Rich School 
செய்திகள்

உலகில் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி இதுதான்… ஒரு வருடத்திற்கு 1.30 கோடிங்க!

பாரதி

கல்வி என்பது ஒருவருக்கு அடிப்படையான தேவை என்பதை அறிந்த சில நாடுகள், கல்வியை இலவசமாக மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அப்படியிருக்க வெளிநாட்டில் உள்ள தனியார் பள்ளி உலகின் மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக இருந்து வருகிறது.

நமது நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே அதிகம். இன்னும் சொல்லப் போனால், பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் மக்கள்கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். இதன்மூலம் அனைவரும் ஒன்று என்பதையும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் தரம் ஒன்றுதான் என்பதையும் உணர்த்துகின்றனர்.

இன்னும் சில நாடுகளில் அரசு பள்ளிகளே அதிகம் இருக்கும். ஒன்றிரண்டு தனியார் பள்ளிகளே இருக்கின்றன.

இப்படியான நிலையில், மிகவும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படும் பள்ளி பற்றிய தகவலைப் பார்ப்போம்.

சுவிட்சர்லாந்தில் உள்ள Institut Le Rosey school என்ற பள்ளியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு சுமார் 420 முதல் 430 மாணவர்கள் வரை படிக்கின்றனர். 65 வெளிநாடுகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்துத் தங்கி படிக்கின்றனர். இங்கு ஒரு வருடத்திற்கு 1.17 கோடி கட்டணம் செலுத்த வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் சுவிட்சர்லாந்தில் மிக அதிகமாகவே உள்ளதாம். இதைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல் லண்டனின் Hurtwood House School- ல் நேர்காணல் எடுத்த பின்னரே மாணவர்களை சேர்ப்பார்கள். இந்த பள்ளியில் படிக்க, வருடம் 25 லட்சம் கட்ட வேண்டும்.

இந்தியாவில் இதுபோன்ற ஏராளமான அதிக கட்டணம் உள்ள பள்ளிகள் இருந்தாலும், அதன் கட்டணம், 10 லட்சமோ அல்லது 15 லட்சமோ என்று லட்சக்கணக்க்கில் இருக்கும். ஆனால், கோடிக் கணக்கில் பணம் கட்டி கல்வி பயிலும் பள்ளி இங்கில்லை என்பது சந்தோஷமான விஷயம்தான்.

கோடிக் கணக்கில் பணம் கட்டி படிக்கும் அத்தனை மாணவர்களும் முதல் ரேங்க் எடுப்பார்கள் போல… அதான்...

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT