குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில், வட மாநிலங்களில் ஏற்கனவே 4 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தென்னனகத்தில் இன்று சென்னை மைசூர் இடையே சோதனை ஓட்டம் தொடங்கியது.
வந்தே பாரத் விரைவு ரயில் சேவையானது முதன்முதலில் குஜராத் தலைநகர் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி வைக்கப் பட்டது.
புல்லட் ரயில் போன்று தோற்றமளிக்கும் இந்த வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்து விடும் என்பது சிறப்பம்சம். அதிவிரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் இதில் வழங்கப்படுகிறது.
அதிவேக இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப் படுகிறது.
நாட்டில் ஏற்கனவே 4 நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 5-வது வழித்தடமாக சென்னை மைசூர் இடையே இந்த ரயில் சேவை தொடங்கியது.
இன்று சோதனை முறையில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை, இம்மாதம் 11-ம் தேதி முதல் பொதுமக்கள் பயணத்துக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.