கூகுளில் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களில் சுமார் 6% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனம் தற்போது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூகிள் வெளியிட்ட அறிவிப்பில் இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியினை கண்டோம். அந்த வளர்ச்சிக்கு மத்தியில் புதியதாக வேலைக்கு பணியமர்த்தினோம். ஆனால் தற்போது நாம் மாறுபட்ட மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகின்றோம். இதனால் இந்த முடிவினை நிறுவனம் எடுத்துள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
இந்த நடவடிக்கை ஊழியர்களின் வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது என்னை பாதிக்கிறது. இருப்பினும் சில தொழில் நுட்ப ஊழியர்களுக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது இதற்காக நான் முழு பொறுப்பேற்கிறேன் என தனது வருத்தத்தினை கூறியிருந்தார் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. . இதற்கிடையில் நீங்கள் ஏன் பதவி விலக கூடாது, நீங்கள் தவறான பந்தயம் கட்டினால், நீங்கள் ஏன் அதற்கான பணத்தை செலுத்தகூடாது என்ற கேள்வியை விஷால் சிங் YourDOST இன்ஜினியரிங் இயக்குனர் எழுப்பியுள்ளார்.
கடந்த காலாண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய ஒரு நிறுவனத்தில், பணி நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை, ஆல்பாபெட் ஊழியர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது. தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்காக ஆல்பாபெட்டை நம்பியிருக்க முடியாது என்று தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தில் பணி நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது