செய்திகள்

அமெரிக்காவைத் தாக்குமா ரஷ்யா?

கல்கி டெஸ்க்

ஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடைபெற்றுவரும் போரே இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்த நிலையில் ரஷ்யாவை எதிர்க்கும் மற்ற உலக நாடுகளையும் பயமுறுத்தும் வேலையிலும் அது தற்போது இறங்கி உள்ளது. அழகிய நாடான உக்ரைன் தற்போது கட்டட இடிபாடுகளால் நிறைந்து காணப்படுகிறது. இத்தனை மோசமான பாதிப்புகளுக்குப் பிறகும், ரஷ்யாவிடம் மண்டியிட உக்ரைன் தயாராக இல்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பண உதவியும் செய்து வருவது ரஷ்யாவை கடுங்கோபம் அடையச் செய்துள்ளது.

இதனை ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்த ரஷ்யா, தற்போது தங்கள் நாட்டு போர்க்கப்பலான 'கர்ஷ்கோவ்'ஐ அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்க நாட்டுக்கு மிக அருகில் நிலைநிறுத்தி உள்ளதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. உலகத்திலேயே மிகவும் அபாயகரமான போர்க்கப்பல் என்றால் அது ரஷ்யாவின் ‘கர்ஷ்கோவ்’தான் என்று சொல்லப்படுகிறது.

‘உக்ரைனுக்கு உதவும் நாடுகளை ரஷ்யா தனது பரம எதிரியாகப் பார்க்கும்; அவர்கள் மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கக் கூட தயங்காது’ என ரஷ்ய அதிபர் புதின் வெளிப்படையாக எச்சரித்திருந்தார். ‘இந்த நாடு’ என்று அவர் பெயர் குறிப்பிடாமல் கூறினாலும், அது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகவே உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ஆயுத உதவிகளை நிறுத்தவில்லை. ரஷ்ய அதிபர் புதினின் எச்சரிக்கையை சட்டை செய்யாமல் இருந்த அமெரிக்கா தற்போது சற்று ஆடித்தான் போயிருக்கிறது. காரணம், ரஷ்யாவின் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலான 'கர்ஷ்கோவ்'ஐ அட்லாண்டிக் கடலில் நிறுத்தியிருப்பதுதான்.

‘சர்கோன்’ உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் இந்த கர்ஷ்கோவ் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான் உலக நாடுகளின் அச்சத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இவை அணு ஆயுதங்களை சுமந்து சென்று ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. அதோடு இது ஒலியை விட ஒன்பது மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த ஏவுகணையை ரேடாரில் கூட கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எந்த ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் சர்கோன் ஏவுகணைகளை அழிக்க முடியாது என்பது இதன் கூடுதல் சிறப்பு. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட இதற்கு இணையான ஏவுகணைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தச் செயல் அமெரிக்க நாட்டையை நிலைகுலையச் செய்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்க அதிபர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

SCROLL FOR NEXT