செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உலக ஸ்குவாஷ் போட்டி: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான கோப்பையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உலக ஸ்குவாஷ் போட்டியை தொடங்கிவைத்தார்.

2023ம் ஆண்டுக்கான சர்வதேச ஸ்குவாஷ் போட்டிக்கான தொடக்க விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் நல் ஆதரவுடன் இந்த உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் சிறப்புடன் நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது 12- ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது சிறப்புக்குரியது. இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள வீரர்கள் அனைவரையும் வரவேற்பதிலும், சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை தொடங்கி வைப்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன்” - எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கின்ற வீரர்களின் அணிவகுப்பு விமர்சையாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு தலைவர், திரு அனில் வாத்வா மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT