புனேவில் உள்ள பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் நேற்றிரவு 3 வயது ஆண் சிறுத்தை நுழைந்ததில், பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 6 ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பின் சிறுத்தை வெளியேற்றப்ப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து பென்ஸ் கார் கம்பெனியின் இந்தியக் கிளைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
புனேவில் உள்ள பென்ஸ் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று பின்னிரவில் சிறுத்தை ஒன்று நுழைந்து அங்கு பணிபுரியும் சுமார் 750 ஊழியர்களை கதிகலங்கச் செய்தது, நேற்றிரவு ஊழியர்கள் பரபரப்பாக பணியில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென் அலுவலகத்துக்குள் சிறுத்தை ஒன்று உறுமியவாறு அங்குமிங்கும் செல்வதை ஊழியர் ஒரு கண்டு அதிர்ந்து, தன் மேலாளரிடம் தகவலை தெரிவித்தார்.
சிறுத்தை கம்பெனிக்குள் சுற்றுவதை சிசிடிவி மூலம் உறுதி செய்ததும், உடனடியாக தொழிற்சாலைக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டனர்.
பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரப் போராட்டத்துக்குப் பின், மயக்க ஊசி செலுத்தி சிறுததையை வனத்துறையினர் பிடித்தனர். அந்த சிறுத்தைக்கு 3 வயது இருக்கும் என்றும் வழிதவறியே தொழிற்சாலைக்குள் நுழைந்துள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
-இவ்வாறு அக்கம்பெனி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பென்ஸ் நிர்வாகம் டிவிட்டரில் கிண்டலாக செய்த ஒரு பதிவு:
நமது பென்ஸ் தொழிற்சாலைக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். அது ஒரு ஆண் சிறுத்தை.
-இவ்வாறு பென்ஸ் கார் நிறுவனம் தன் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தது.
இந்த சம்பவத்தில் சிறுத்தையால் ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.