OpenAI நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
OpenAI நிறுவனத்தின் ChatGPT வெளிவந்த பிறகுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல அதிரடி மாற்றங்கள் வர ஆரம்பித்தது. இப்போது இந்த நிறுவனம் சாம் அல்ட்மேட் என்பவர் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது எனக் கூறப்பட்ட OpenAI நிறுவனம், கடந்த அக்டோபர் மாதம் வரை 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டி இருந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டே மாதத்தில் கூடுதலாக 300 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிலும் அந்நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் ChatGPT செயற்கை நுண்ணறிவு சாட்பாட் மூலமாகவே வந்திருக்கிறது. இதை மேலும் மேம்படுத்தி பல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்க அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறுவனத்தின் சிஇஓவை நீக்குவதாக பிரச்சனைகள் எழுந்தது. அந்த சமயத்தில் நான்கு நாட்களில் நான்கு சிஇஓக்கள் மாறினார்கள்.
அதற்கு அந்த நிறுவன ஊழியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் சாம் அல்ட்மேனே பதவியேற்க நேர்ந்தது. இதைத் தொடர்ந்து சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் வரை முதலீட்டாளர்களிடம் நிதி திரட்ட OpenAI நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இதில் அந்நிறுவனம் வெற்றி பெற்றால், எலான் மஸ்கின் ஸ்பேஸ்X நிறுவனத்திற்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக OpenAI மாறும் என டெக் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் 1.7 பில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டியிருப்பது பெரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர்.