Instagram Tips
Instagram Tips 
அறிவியல் / தொழில்நுட்பம்

2024 Instagram Tips: இந்த 10 விஷயங்களைப் பின்பற்றினால் நீங்களும் இன்ஸ்டாவில் பிரபலமாகலாம்!

கிரி கணபதி

சமூக ஊடக உலகில் தொடர்ந்து வளர்ந்து வரும் இன்ஸ்டாகிராம் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான அதிகாரம் மையமாகவே இருக்கிறது. இதில் அதிகப்படியான பயனர்கள் இருப்பதால் instagram-ல் பிரபலமடைந்து பல புதிய வாய்ப்புகளை நாம் உருவாக்க முடியும். 2024ல் instagram-ன் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த பதிவின் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைவதற்கு செய்ய வேண்டிய 10 விஷயங்கள் என்னவெனப் பார்க்கலாம். 

  1. உங்கள் பிராண்டை தேர்வு செய்யுங்கள்: உங்கள் தனிப்பட்ட அல்லது தொழில்முறை பிராண்ட் அடையாளத்தைத் தேர்வு செய்வதே இன்ஸ்டாகிராமில் பிரபலம் அடைவதற்கு முதல் படியாகும். இதன் மூலமாக மற்றவர்களிடமிருந்து நீங்கள் தனித்து நின்று, உங்களுக்கான ஒரு கூட்டத்தை உருவாக்க முடியும். 

  2. ஈர்க்கும் உள்ளடக்கம்: நீங்கள் எந்தத் துறையை தேர்வு செய்திருக்கிறீர்களோ அது சார்ந்த மக்களை ஈர்க்கும் கண்டென்டுகளை உருவாக்குங்கள். குறிப்பாக நீங்கள் உருவாக்கும் கண்டென்டுகள் பிறர் எதிர்பார்க்கும் படி இருக்க வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற பல வடிவங்களில் உள்ளடக்கத்தை உருவாக்குங்கள். 

  3. ஹேஷ்டேக் பயன்படுத்தவும்: நீங்கள் எதுபோன்ற உள்ளடக்கம் அப்லோடு செய்கிறீர்களோ அதற்கு தொடர்புடைய ஹேஷ்டேக் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். அப்போதுதான் instagram அல்காரிதம் உங்களுடைய காணொளி எது பற்றியது என்பதைத் தெரிந்துகொண்டு, அதை யாரிடம் கொண்டு சேர்க்கலாம் என்பதை முடிவெடுக்கும்.

  4. தொடர்ச்சியாக பதிவுகள் போடவும்: இன்ஸ்டாகிராமில் வளர்வதற்கு கன்சிஸ்டென்சி மிக முக்கியம். உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு தொடர்ச்சியாக பதிவுகள் போடும் அட்டவணையை தயாரித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பின்தொடர்பவர்களை எப்போதும் உங்கள் மீது ஈடுபாட்டுடன் வைத்திருக்க உதவும். 

  5. ரெஸ்பான்ஸ் செய்யுங்கள்: உங்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் உங்களை சார்ந்தவர்களுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவும். அதாவது யாராவது கருத்து போட்டால் அதற்கு பதில் அளியுங்கள். பிற பயனர்களின் பதிவுகளுக்கு லைக் மற்றும் கருத்து தெரிவிக்கவும். முடிந்தால் நேரடியாக மெசேஜில் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்.

  6. கொலாபரேஷன் செய்யுங்கள்: ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர்களுடன் கொலாபரேஷன் செய்து பதிவுகள் போடுங்கள். இது உங்களுக்கான பின்தொடர்பவர்களை விரைவாக அதிகரிக்கும் யுக்தியாகும். உங்களுடைய துறை சார்ந்த மற்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூன்ஸர்களுடன் தொடர்பு கொண்டு, கொலாப் செய்யலாம் என கோரிக்கை வையுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

  7. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பயன்படுத்துங்கள்: உங்களைப் பின்தொடர்பவர்கள் அவ்வப்போது உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பெரிதும் உதவும். எனவே தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்டோரீஸ் வைக்கத் தவறாதீர்கள். இது உங்கள் ஆடியன்சுடனான எங்கேஜ்மென்டை அதிகரிக்க உதவும். 

  8. வீடியோ உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்: வீடியோ உள்ளடக்கம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே உங்களது பதிவுகளில் அதிகபடியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் காணொளிகள் போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலமாக பிறரது கவனத்தை எளிதாக ஈர்க்கலாம். 

  9. உங்கள் பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்: நீங்கள் உருவாக்கிய உள்ளடக்கங்களை உங்கள் பின் தொடர்பவர்களை பகிர்ச் சொல்லுங்கள். இதன் மூலமாக உங்களது உள்ளடக்கம் பல இடங்களுக்கு பரப்பப்பட்டு, விரைவில் அதிக பிரபலமடைய வாய்ப்புள்ளது.

  10. இன்ஸ்டாகிராம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்: இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் கொண்டுவரப்படும். அதைப் பற்றி தெரிந்து கொண்டு உடனடியாக உங்களை அதற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள். இன்ஸ்டாகிராம் அல்காரிதம் குறித்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதன் மூலமாக, உங்களது உள்ளடக்கங்களை மேலும் சிறப்பாக நீங்கள் உருவாக்க முடியும். 

இந்த 10 வழிமுறைகளைப் பின்பற்றினால், 2024ல் இன்ஸ்டாகிராமில் நீங்களும் ஒரு பிரபலமான இன்ஃப்ளூன்ஸராக மாற முடியும். 

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT