AI writing tool 
அறிவியல் / தொழில்நுட்பம்

கதைக் கருவும், கற்பனையும் இருந்தால் போதும் எழுத்தாளர்கள் இனி எழுத வேண்டாம்! என்னங்கடா காலம் இது?

எஸ்.விஜயலட்சுமி

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உதவும் மிகச் சிறந்த 8 AI கருவிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. கேக்டஸ் ( Caktus):

எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எழுத்தின் தரத்தை மேம்படுத்த இந்தக் கருவி உதவுகிறது. சிறந்த சொற்களைத் தேர்வு செய்தல் இலக்கணத் தவறுகளை சரிசெய்தல் வாக்கிய அமைப்பு பற்றிய கருத்துகளை வழங்குதல் போன்ற செயல்கள் மூலம் எழுத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. அவர்களின் கட்டுரைகளை தெளிவாகவும் தொழில் முறையாகவும் மாற்றும் சக்தி படைத்தது. பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களை விரைவாக சேகரித்து சுருக்கமாக வழங்குகிறது. இதனால் அவர்களது நேரம் மிச்சப்படுகிறது. தரமான கதைகளை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.

2. கிராமர்லி (Grammarly):

எழுத்தாளர்களின் உரையில் உள்ள இலக்கணம், நிறுத்தற்குறிகள் மற்றும் எழுத்துப் பிழைகளை சரி பார்க்கிறது. எழுதும் பாணியை தெளிவுபடுத்தவும் மேம்படுத்தவும் பரிந்துரைகளை வழங்குகிறது. வாக்கியங்கள் அமைப்பு மற்றும் சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்தல் போன்றவற்றில் உதவுகிறது. இதனால், கட்டுரைகள் மற்றும் கதைகளை வாசகர்கள் எளிதாக படித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

3. ஓட்டர் ஐ (Otter.ai):

இது ஒரு திறமையான ட்ரான்ஸ்க்ரிப்ஷன் கருவியாகும். பேச்சுவழக்கு வார்த்தைகளை அழகிய உரைநடையாக மாற்றுகிறது. பத்திரிக்கையாளர்களுக்கு நேர்காணல்கள் சந்திப்புகள் அல்லது பதிவுகளை விரைவாக படியெடுக்க உதவுவதால் அவர்களின் நேரம் மிச்சப்படுகிறது. எழுதும் கட்டுரைகளின் உள்ளடக்கம் மேம்படுத்தப்படுகிறது.

4. கூகுள் பார்டு (Google Bard):

எழுத்தாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் எழுதத்தூண்டும் கருத்துகளையும் உருவாக்க உதவுகிறது. இதனால் புதிய கோணங்கள் அல்லது தலைப்புகளில் அவர்களால் எழுத முடிகிறது. புதுமையான விஷயங்களை நேர்த்தியான வடிவத்தில் தர முடிகிறது.

எளிதாகப் பகிர்வதற்காக, பழைய கடிதங்கள் அல்லது ஆவணங்களை படங்களில் இருந்து டிஜிட்டல் உரையில் படியெடுக்கவும் உதவுகிறது.

5. குவிஸ் ஜெக்கோ (Quiz Gecko):

பலதரப்பட்ட டெம்ப்லேட்டுகளை வழங்கும் இந்தக் கருவியின் உதவியுடன் எழுத்தாளர்களால் வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் வினாடி வினாக்களை, விளக்கக் காட்சிகளை உருவாக்க முடியும். தங்களுடைய தனித்துவமான நடையை மற்றும் பிராண்டிங்கைப் பிரதிபலிக்கும் வகையில் பிரமிக்க வைக்கும் ஸ்லைடு காட்சிகளை உருவாக்கலாம். தங்கள் படைப்புகளின் உள்ளடக்கத்தை வசீகரமாக அமைக்க முடியும். வாசகர்களுடன் எளிதாக இன்ட்ராக்ட் செய்யும் வகையிலும் அவர்களை இதில் ஈடுபடுத்தவும் முடியும்.

6. நோஷன் (Notion):

எழுத்தாளர்கள் தங்களுடைய திட்டங்கள் ஆராய்ச்சிகள் மற்றும் யோசனைகளை ஒரே இடத்தில் ஒழுங்காக வடிவமைக்க உதவுகிறது. குறிப்புகளைச் சுருக்கி, உரையை மாற்றியமைப்பதில் மற்றும் கூட்டங்களுக்குப் பிந்தைய பணிகளை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது.

7. டூயோலிங்கோ (Duolingo):

பல்வேறு மொழிகளை கற்க உதவும் ஒரு மொழி கற்றல் தளம் இது. இலக்கணம் சொற்களஞ்சியம் மற்றும் உச்சரிப்பு உட்பட எழுத்தாளர்களின் மொழித்திறனை மேம்படுத்த உதவுகிறது. பன்மொழிச் சூழலில் பணிபுரியும் எழுத்தாளர்களுக்கு பலதரப்பட்ட வாசகர்களை சென்றடையும் வகையில் தங்கள் மொழியியல் திறன்களை விரிவுபடுத்த உதவுகிறது.

8. எட்மென்டம் (Edmentum):

இது ஆன்லைன் படிப்புகள் மற்றும் வளங்களின் மூலம் எழுத்தாளர்கள் தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த வாய்ப்புகளை வழங்குகிறது. எழுத்து நுட்பத்தை செம்மைப்படுத்துவது புதிய வகையான எழுத்து பாணிகளை ஆராய்வது அது குறித்த நிபுணத்துவம் பெறுவது என்று எழுத்தாளர்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT