சஷ்டி அப்த பூர்த்தி விழாவில் கலந்து கொண்ட நீங்கள், உங்கள் நண்பரிடம் பூமியில் உங்கள் வயது அறுபது என்றால் புதனில் உங்கள் வயது 249 என்று சொல்லுங்கள்.
பிரமிப்பார்!
தொடர்ந்து சுக்ரனில் 97, செவ்வாயில் 31, வியாழனில் 5 வயது சனியில் 2 வயது என்று சொல்லுங்கள்.
பிரமித்துப் போவார்.
கீழே உள்ள அட்டவணை அனைத்து அறிவியல் விவரங்களையும் தருகிறது.
நீங்கள் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன் ஆகிய கிரகங்களில் இளமையுடன் இருப்பீர்கள்.
புதனிலும் சுக்ரனிலும் வயதானவராய் இருப்பீர்கள்.
இதுவே பூமியில் உங்கள் வயது நூறு என்றால் இதர கிரகங்களில் வயது என்ன?
இதோ அட்டவணை:
இதற்கான அறிவியல் காரணம் என்ன?
மனிதர்கள் பொதுவாக தங்கள் வயதை ஆண்டுகளிலேயே கணக்கிடுகிறார்கள். இதர கிரகங்களில் உங்களின் வயது அந்த கிரகங்களின் ஓடுபாதையைப் (ORBIT) பொறுத்தே அமைகிறது. ஆகவே தான் பூமியில் 60 என்றால் புதனில் 249 என்று ஆகிறது. கிரகங்கள் சூரியனை வெவ்வேறு கால அளவில் சுற்றுகிறது. ஆகவே ‘ஒரு வருடம்’ என்பது ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறான கால அளவு. சுழற்சி வேகம் ஒவ்வொர் கிரகத்திற்கும் வேறு மாதிரியாக உள்ளது. இதனால் தான் மேலே உள்ள அட்டவணை வெவ்வேறு அளவைத் தருகிறது!
எனக்கு வயது இருபது என்றால் எப்படி மற்ற கிரகங்களின் வயதைத் தெரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம்.
இணைய தளத்தில் கூகில் தேடலில் My Age in other planets என்று டைப் செய்தால் வரும். அட்டவணையில் உங்கள் வயதை பதிவு செய்து கிரகம் வாரியாக வயதைப் பெறலாம்.
சந்திரனைப் பொறுத்த மட்டில் அதன் ஒரே முகத்தைத் தான் நாம் பார்க்கிறோம். ஏனெனில் அதன் சுழற்சி 29.53 பூமி நாட்கள். பூமி 24 மணி நேரத்தில் தன் சுழற்சியை முடிக்கும் போது சந்திரன் சூரிய உதயத்தை 709 மணி நேரங்களில் பார்க்கிறது.
ஆகவே பூமியில் உங்கள் வயது 60 என்றால் சந்திரனில் 742.11.
பூமியில் நூறு என்றால் சந்திரனில் 1236.85
நிலாவிலே உல்லாசமாய் ஆடலாம்! பாடலாம்!